×

அவதூறு வழக்கில் சசிதரூருக்கு பிடிவாரன்ட்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி  சசிதரூர், கடந்த ஆண்டு அக்டோபரில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘பிரதமர் மோடி சிவலிங்கம் மீது இருக்கும் தேளை ேபான்றவர்’ என அவர் விமர்ச்சித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது டெல்லி பாஜ தலைவர் ராஜிவ் பாப்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் கடந்த ஜூனில் சசிதரூர் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நவீன்குமார் காஷ்யப் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், சசிதரூரும்,  ராஜிவ் பாப்பரும் ஆஜராகவில்லை. இதனால். பாப்பருக்கு நீதிபதி ரூ500 அபராதம் விதித்தார். சசிதரூருக்கு ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்தார். விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Sasidaru , Defamation case, Sasi Tharoor, Bdivarand
× RELATED கல்வி நிறுவனங்களில் அவசர நியமனம்: சீத்தாராம் யெச்சூரி கேள்வி